நடிகர் விஜய் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நா அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது.
அதன்பிறகு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்றார்.
தொடர்ந்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு ஒருமுறை கதை சொல்லியிருந்தார். ஆனால், நடிப்பில் ஈடுபாடில்லை என்றும் இயக்குநராக விரும்புவதாகவும் கூறிய சஞ்சய், சில குறும்படங்களையும் இயக்கினார்.
சமீபத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் நாயகனாக நடிக்கவுள்ள நடிகர்கள் என ஒரு தகவல் பட்டியலே வெளியாகி வருகிறது. ஆனால், யார் நாயகன் என இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தனுஷ் படத்தின் புதிய அப்டேட் வெளியானது!

ஆர்யா - 40 திரைப்படத்தில் 2 நாயகிகள்!
அசத்தும் கென்-ன் யூத் டிரைலர்!
கர வெளியீட்டு போஸ்டர்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

