திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

நானி - 33 அறிவிப்பு!

நடிகர் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2024, 1:20 pm


தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றது.

நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்தக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story image

டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சரிபோத சனிவாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஏற்கனவே கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முரளி ஜி. ஒளிப்பதிவு. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், நானியின் 32-வது படத்தின் அறிவிப்புக்கு முன் அவரின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிக்கிறார். ’நீங்கள் தலைவராக எந்த அடையாளமும் தேவையில்லை’ என்கிற வரியுடன் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 2025-ல் இப்படம் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.