பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

நடிகை ஈஷா ரெப்பா பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம் எனக் கூறியுள்ளார்.

Published On :

ஆந்திரத்தைச் சேர்ந்த நடிகை ஈஷா ரெப்பா 2012இல் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். இதுவரை 17 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஓய், நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி பாதையை அமைத்துள்ளார் ஈஷா ரெப்பா. 2018இல் வெளியான ஏவ் படத்தில் தன்பாலின ஈர்பாளராக நடித்து அசத்தினார்.

Story image

தற்போது ஈஷா ரெப்பா தருண் பாஸ்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே எனும் படத்தின் தெலுங்கு ரீமெக்கில் நடித்து வருகிறார்.

Story image

விபின் தாஸ் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான ஃபாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் உருவான மலையாள திரைப்படமான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மாபெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் ஈஷா ரெப்பா பங்கேற்று பேசியிருந்தார். அதில் அவர் பேசியதாவது:

Story image

நல்ல இயக்குநர்கள் நல்ல படங்களை இயக்குவார்கள். தருண் பாஸ்கர் இயக்குநர் நன்றாக நடிக்ககூடியவர். அவரது கீடா கோலா படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். நான் எப்போதும் படத்தின் கதையை வைத்துதான் அதில் நடிக்கலாமா வேண்டாமா எனத் தேர்வு செய்கிறேன்; பணத்தை வைத்து அல்ல. தற்போது ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடுமையான வெப்பநிலையில் ஆந்திராவின் காரசாரமான உணவுகளை உண்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.