இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

நடிகை சோனம் கபூர் இந்தியாவை எந்த வகையில் பிரதிநிதித்துவம்படுத்த விழைகிறேன் என்பதைக் கூறியுள்ளார்.
Published on

நடிகை சோனம் கபூர், நடிகர் அனில் கபூரின் மகள். 2007இல் சஞ்சய் லீலா பன்சாலியின் சாவரியா படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனுடன் நடித்த தில்லி-6 நல்ல வரவேற்பினை பெற்றது. 2016இல் வெளியான நீர்ஜா படத்துக்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சோனம் கபூர் தனது காதலரும் தொழிலதிபருமான ஆனந்த் அகுஜாவை 2018இல் திருமணம் செய்தார். 38 வயதான சோனம் கபூருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் இன்னும் இளமையாக இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இறுதியாக கடந்தாண்டு ஜூலையில் ஜியோ சினிமாஸில் ப்ளைண்ட் எனும் படம் வெளியானது.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?
மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

ஃபேஷன் துறையில் விருப்பமான நடிகை சோனம் கபூர் சமீபத்தில் தெற்காசிய வணிகவியல் கூட்டமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்காக கௌரவமாக உள்ளதெனப் பேசியுள்ளார். அவர் பேசியதாவது:

நான் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால், நாட்டின் பன்முகத்தன்மையும் நெகிழ்வுறுதித்தனைமையும் முதன்மைப்படுத்துவேன். நமக்கு வலுவான கலாச்சார பாரம்பரியமும் பழங்கால நாகரிகமும் இருக்கின்றன என்பது உண்மை. இதனால் இந்தியாவில் எது உருவானாலும் அதற்கு மிகுந்த மதிப்பு இருக்கும். பலவிதமான நம்பிக்கைகள் கொண்ட பல காலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். அதை பிரதிநிதித்துவம் செய்வது மிகவும் முக்கியமானது.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?
இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

யோகா, ஞானத்தின் பிறப்பிடமாக இந்தியா இருக்கிறது. மேலும், இந்தியாவின் இசை, கைவினை பொருட்களுக்கும் உலகில் பெரும் வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் இதில் நகைகள், தையல் வேலைபாடுகளின் பாதிப்பு இருக்கும். மிகவும் குறிப்பாக விலையுயர்ந்த வீடுகள் அவர்களின் ஆடை வடிவமைப்புகளில் அதன் தையல் வேலைபாடுகள் நன்கு தெரியும்.

உங்களுக்கென ஒரு இடம் அமையும்போது உங்களது உண்மையான சுயத்தை முன்வைக்க வேண்டும்; மாறாக கட்டிடத்தின் முகப்பு போல ஒன்றினை வைத்து ஏமாற்றக்கூடாது. உங்களிடம் நியாயமான கொள்கைகள், உலகம் குறித்தான பார்வைகள் இருந்தால் மக்களுக்கும் அவை பிடித்திருந்தால் அவர்களும் அதைப் பின்பற்றுவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com