
நடிகர் மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வெளியான பிரம்மயுகம் விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூல் ரீதியான வெற்றியையும் அடைந்தது.
அடுத்ததாக, மே.23 ஆம் தேதி டர்போ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கதை கேட்டதாகவும் அது அவருக்குப் பிடித்துப்போக தன் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஸார்ச், கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.