ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :21 மே 2024, 1:12 pm

DIN

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் தன் அடுத்தடுத்த படங்களைக் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். இறுதியாக, இவர் நடித்த ‘சைரன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் வெற்றியைப் பெற்றது.

தற்போது, இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்திலும் ஜீனி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என்ன கேள்வியென்றாலும் கேளுங்கள்’ எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். அதில் ஒருவர், இதுவரை நாங்கள் பார்க்காத ஜெயம் ரவியுடனான உங்கள் புகைப்படம் எது? எனக் கேட்டிருந்தார்.

Story image

அதற்கு, ஆர்த்தி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து இதை எடுத்தவர் நடிகர் விஜய் அண்ணா எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் இப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.