![அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!](http://media.assettype.com/dinamani%2F2024-05%2F9771fabf-5997-4fef-ad7f-c516e800bb91%2Fdelna.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நடிகை டெல்னா டேவிஸ் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டெல்னா டேவிஸ்.
இவர் விடியும் வரை பேசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, ஆக்கம் மற்றும் குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
அன்பே வா தொடரில் பூமிகா பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நடிகை டெல்னா டேவிஸ். பின்னர், இத்தொடரில் இருந்து விலகுவதாக அவரே அறிவித்தார்.
தொடர்ந்து, சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடரில் டெல்னா டேவிஸ் - சல்மானுல் பாரிஸ் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்தொடரின் படப்படிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், எம்ஆர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் டெல்னா டேவிஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் மேகராஜ் தாஸ் எழுதி இயக்குகிறார். எம்ஆர் பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை மகேந்திரன் தயாரிக்கிறார்.
எம்ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.