வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது: எஸ்பிஐ விளக்கம்வங்கி, நிதிப் பங்குகள் சரிவு எதிரொலி: வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!6 வார உச்சத்தில் இந்திய ரூபாய்!மழைக்கால நோய்த் தடுப்புக்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: மு. வீரபாண்டியன்சிஜேபி தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ்!எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி! புயலைக் கிளப்பும் புதிய படங்கள்!முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்பே டயானா! எதில், எப்போது பார்க்கலாம்!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்பே டயானா திரைப்படம் குறித்து...

Dear Diana Poster.

அன்பே டயானா போஸ்டர். - படம்: எக்ஸ் / மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்

Updated On :

அன்பே டயானா திரைப்படம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மில்லியன் டாலர் பிக்சர்ஸ் மற்றும் இரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சென்னை பெரம்பூரில் நடக்கும் கதையாக உருவான இதில், நாயகன் ஆங்கிலோ இந்தியனான நாயகியைக் காதலிக்கும் கதையாக இது உருவாகியிருந்தது. காதல், குடும்பம் என நகைச்சுவை படமான வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தில் ரோஜா, சேத்தன், ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இதனிடையே, அன்பே டயானா திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், அன்பே டயானா திரைப்படம் சோனி விழா தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 25) பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The date and time for the television broadcast of the movie Anbe Diana has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER