எப்படி இருக்கிறது ட்ரோன்ஸ்? - திரை விமர்சனம்
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ளது ட்ரோன்ஸ் திரைப்படம் குறித்து...

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ரோன்ஸ் திரைப்படம்
எப்படி இருக்கிறது ட்ரோன்ஸ்? - திரை விமர்சனம்
ஜி எம் மோர்கன் தயாரிப்பில் இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ளது பிரவுன் திரைப்படம்.
கல்லூரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று நண்பர்கள் பிளாக் ஹோல் எனப்படும் ஒரு மர்மமான வீட்டில் தங்குகின்றனர். ப்ரோன் மூலம் உணவை தேடும் டிராவிட் ஒரு பழைய கட்டடத்தில் வசிக்கும் சித்தியைக் கண்டு அவரது அழகில் மயங்குகிறார். அவர் மீது காதல் கொள்கிறார். தனது பாட்டியால் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது என முதலில் மறுக்கும் சித்தி அதன் பின் டிராவிட் காதலை ஏற்றுக் கொள்கிறார். சூனியக்காரி பாட்டியான தேவதர்ஷினியிடம் ஒரு கட்டத்தில் சிக்கி கொள்ள அதன்பின் நாயகன் டிராவிட் எப்படி அங்கிருந்து தப்பித்தார். அதற்கு அவரது நண்பர்கள் எப்படி உதவினர் என்பதே ட்ரோன்ஸ் திரைப்படத்தின் கதை.
கதை தொடங்கும் போது இது நமக்குள் இருக்கும் குழந்தை தன்மையுடன் பார்க்க வேண்டிய படம் வேண்டும் எனும் அறிவுறுத்தலை கொடுத்து விடுகின்றனர்.
பரிதாபங்கள் வீடியோக்களின் மூலம் கவனம் பெற்ற டிராவிட் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். காதல், விரக்தி, ஏமாற்றம் என உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் நல்ல முயற்சியைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இணையாக வந்துள்ள அஞ்சலி நாயர் நடிப்பு கவனம் பெறும்படி அமைந்திருக்கிறது. கருப்பு நிறத்தால் கேலிக்குள்ளாவதில் தொடங்கி, காதலுக்காக விட்டுக் கொடுக்கும் பெண்ணாக கண்களால் பேசி நடித்திருக்கிறார் அஞ்சலி. அஞ்சலியின் நடிப்பு படத்திற்கு உணர்வைக் கொடுக்கிறது. இவர்களுடன் தீபக், குறைசி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் படம் முழுக்க வருகின்றனர். நகைச்சுவையை ஆங்காங்கே முயற்சித்து இருந்தாலும் பெரிய அளவு கை கொடுக்கவில்லை.
சூனியக்காரி பேயாக வந்திருக்கும் தேவதர்ஷினியும் அவரின் இளமை தோற்றமாக இருக்கும் சித்தி இத்தனானியும் சுற்றியே கதை நகருகிறது. இருவரது நடிப்பும் படத்திற்கு ஆறுதல்.
நிறத்தை முன் வைத்து அழகை தீர்மானிக்கும் உலகில், எது அழகு எனும் கேள்வியோடு முடிகிறது திரைப்படம். முதல் பாதியில் கதைக்குள் செல்வதற்கு ஏற்படும் தாமதம் ஒருவித குழப்பத்திற்கு வழி கொடுக்கிறது. மர்மமான குறைசி வீடு பெரிய ஈர்ப்பை கொடுக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாதி திரைக்கதை கதைக்குள் ஒன்ற செய்து விடுவது நலம். இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதையும், கவனம் இருக்கும் காட்சி அமைப்புகளும் படத்தை காப்பாற்றுகிறது.
இரண்டே இடங்களில் நடக்கும் ஒட்டுமொத்த கதையை போரடிக்காமல் கொண்டு செல்ல கேமரா உள்பட இசை, கலை இயக்கம் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
பேன்டசி திரில்லர் கதை மீது ஆர்வம் கொண்டவர்கள் ட்ரோன்ஸ் திரைப்படத்தை முயற்சித்து பார்க்கலாம்.
Drones spends a while digging itself into a hole. A sleepwalking student, a scientist building a made-to-order girlfriend
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

