மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

தேப்ஜானி நடிக்கும் புதிய தொடரின் பெயர் மாற்றம்!

பவன் - தேப்ஜானி நடிக்கும் புதிய தொடரின் பெயர் மாற்றம் குறித்து...

bhairavi serial

தேப்ஜானி நடிக்கும் பைரவி தொடர். - படம்: விடியோ கிளிப்

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு மாற்றாக பைரவி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

கயல் தொடர் வரும் அக். 24 ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இந்தத் தொடருக்கு மாற்றாக அக். 26 ஆம் தேதி முதல் புதிய தொடரான பைரவி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்தத் தொடரை விஷன் டைம் நிறுவனம் தயாரிக்கிறது.

மிஸ்டர் மனைவி தொடரில் பவன் - தேப்ஜானி ஆகியோர் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், இவர்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில்கூட ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த நிலையில், பைரவி தொடரில் இவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். தொலைந்துபோன வாழ்க்கையை தேடும் நாயகியின் கதையாக இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

மேலும், இந்தத் தொடரில் நடிகர் ரமேஷ் கண்ணா, குறிஞ்சி, ராஜா, அஜய் ரத்னம் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முன்னதாக, இந்தத் தொடருக்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில், பைரவி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முன்னோட்டக் காட்சியும் வெளியாகியுள்ளது.

Summary

As the serial Kayal, currently airing on Sun TV, is set to conclude soon, a new serial titled Bhairavi will be broadcast as its replacement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.