கயல் தொடரின் பிடிஎஸ் விடியோவை வெளியிட்ட சைத்ரா ரெட்டி!
கயல் தொடரின் திரைக்குப் பின்னால் நடந்த நிகழ்வுகள் குறித்து...

கயல் தொடர் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய விடியோவை நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021 அக். 21 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த கயல் தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றும் டிஆர்பியில் முன்னணியிலும் இருந்து வந்தது.
இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வந்தார்.
எப்போதும் டிஆர்பியில் முதல் 3 இடங்களைப் பிடித்து ரசிகர்களின் ஆதரவுடன் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. 5 ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த கயல் தொடர் 1555 எபிசோடுகளுடன் கடந்த அக். 24 ஆம் தேதி நிறைவடைந்தது.
இதனிடையே, இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சைத்ரா ரெட்டி, கயல் தொடர் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய விடியோவை வெளியிட்டு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அதில், “எனது செல்போனில் உள்ள சேமித்து வைக்கப்பட்டுள்ள சிறிய காணொலிகள், சிரிப்பொலிகள், சோர்வடைந்த முகம், திரைக்குப் பின்னால் நடந்த நிகழ்வுகள், அழகான நாள்கள் எல்லாம் இன்று தொகுப்பாக மாறியுள்ளது.
இந்த நினைவுகளை எல்லாமல் பத்திரமாக வைத்திருக்க விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள், நான் திரும்பிப் பார்க்கும்போது, கயல் பாத்திரத்தை மட்டுமல்ல, அதில் நான் வாழ்ந்த வாழ்க்கையையும் நினைவுகூர விரும்புகிறேன்.
கயல் பாத்திரத்தோடு நான் வாழ்ந்த 5 ஆண்டுகளில், யாரும் பார்த்திராத சில தருணங்களின் தொகுப்புகள் இவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Actress Chaitra Reddy has released a video containing footage captured during the shooting of the serial 'Kayal'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


