ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வைரலாகும் கயல் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள்!

கயல் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்.

kayal serial

கயல் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் அக். 24 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் தொடர், 1500 நாள்களைக் கடந்தும், 5 ஆண்டுகளை நெருங்கியும் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 2021 அக். 21 ஆம் தேதி ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர், திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார்.

இதனிடையே, கயல் தொடரின் நாயகன் சஞ்ஜீவ், இந்தத் தொடரில் இருந்து விலகியதாகத் தகவல் வெளியான நிலையில், இறுதிக்கட்ட காட்சிகளில் அவர் நடித்து வருகிறார்.

இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே, இந்தத் தொடரின் கதை எடுக்கப்பட்டு வருகிறது.

கயல் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள்.

கயல் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள். - kayal serial

இந்த நிலையில், கயல் தொடரின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் தொடர் குழு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கயல் தொடருக்கு மாற்றாக அக். 26 ஆம் தேதி முதல் புதிய தொடரான ஜேப்ஜானியின் பைரவி சீரியல் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Summary

The serial 'Kayal', currently being broadcast on Sun TV, is set to conclude on October 24th, and the filming for it has now been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.