புதிய கதைக்களத்துடன் மல்லி தொடரின் 2 ஆம் பாகம்! படப்பிடிப்பு தொடக்கம்!
மல்லி தொடரின் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

ஜிஷ்ணு மேனன், ஹரிகா சாது - படம்: இன்ஸ்டாகிராம்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி தொடரின் கதைக்களம் மாற்றப்பட்டு, இரண்டாம் பாகம் எடுக்கும் பணியில் தொடர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
2024 ஏப்ரல் முதல் ஒளிபரப்பாகிவரும் மல்லி தொடர் 900 நாள்களை கடந்து ஒளிபரப்பாகிறது. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மல்லி தொடர், வார இறுதி நாள்களிலும் இரவு 10.30 ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் நிகிதா ராஜேஷ் நாயகியாகவும் விஜய் வெங்கடேசன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்தத் தொடரில் நாகஸ்ரீ, மகாலட்சுமி, நளினி, நிரஞ்சனா, பாரதி மோகன், கிருத்திகா, தேவ் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், மல்லி தொடர் முதல் பாகம் முடிக்கப்பட்டு, இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பணிகளை தொடர் குழு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பும் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மல்லி தொடரின் கதைக்களம் மாற்றியமைக்கப்பட்டு, புதிய கதையுடன் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. இதில் ஜிஷ்ணு மேனன், ஹரிகா சாது ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மல்லி தொடரின் 2 ஆம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி, ஒளிபரப்பு தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The storyline of the serial Malli, currently being broadcast on Sun TV, is being revamped, and the production team is now working on a second season.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


