தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

கயல் தொடரில் மீண்டும் சஞ்ஜீவ்!

கயல் தொடரில் மீண்டும் இணைந்த நடிகர் சஞ்ஜீவ் குறித்து...

kayal serial

கயல் தொடரில் நடிகர் சஞ்ஜீவ். - படம்: விடியோ கிளிப்

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் இருந்து விலகியிருந்த சஞ்ஜீவ், மீண்டும் இந்தத் தொடரில் இணைந்துள்ளார்.

இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் தொடர், திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். கயல் தொடர் 1500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே, கயல் தொடரின் நாயகன் சஞ்ஜீவ், இந்தத் தொடரில் இருந்து விலகியதாகத் தகவல் வெளியானது. , சஞ்ஜீவ் தொடர்பான காட்சிகள் இடம்பெறாமலும் இருந்து வந்தது.

பின்னர், கதைக்களத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய பாத்திரங்கள் மூலம் கயல் தொடர் எடுக்கப்பட்டு வந்தது. 5 ஆண்டுகளை நெருங்கி ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் வரும் அக். 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், கயல் தொடரின் இறுதிக்கட்டக் காட்சியில் சஞ்ஜீவ் நடித்துள்ளார். இது தொடர்பான முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Summary

Sanjeev, who had left the Sun TV serial Kayal, has rejoined the show.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.