ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அமரன் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :25 மே 2024, 10:34 am

DIN

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், மறைந்த இராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைமந்த இராணுவ வீரரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அமரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.