முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக் டவுன்’ ரிலீஸ் தேதி!

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 மே 2024, 3:45 pm IST

‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

தமிழில் தனுஷ் உடன் ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். அனுபமா நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா - 2’ , ‘18 பேஜஸ்’ டில்லு ஸ்கொயர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது, அனுபமா ‘பரதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை பிரவீன் கந்த்ரேகுலா இயக்குகிறார்.

Story image

லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வந்தார். இப்படத்துக்கு ‘லாக் டவுன்’ பெயரிடப்பட்டுள்ளது. சுபாஸ்கரன் இப்படத்தை வழங்குகிறார்.

லாக் டவுன் படத்தை எழுதி இயக்குகிறார் ஏஆர் ஜீவா. என்ஆர் ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசையமைக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப் படம் வரும் ஜூன் மாதம் வெளியாகுமெனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.