செளந்தர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சாச்சனா
செளந்தர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சாச்சனாபடம் | எக்ஸ்

பிக் பாஸ் 8: பெண்கள் அணிக்கு எதிராக மாறிய சாச்சனா?

பிக் பாஸ் 8 வீட்டில் உள்ள சாச்சனா, முதல் சீசன் போட்டியாளர் ஜூலியை நினைவூட்டுவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Published on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை சாச்சனா பெண்கள் அணிக்கு எதிராக மாறியது போன்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 30வது நாளான இன்று பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருவீட்டாருக்கும் இடையில் கோடு போடப்பட்டுள்ளது. ஆண்கள் அணிப்பக்கம் அத்தியாவசியத் தேவைகள் உள்ளதால், பெண்கள் அடிக்கடி ஆண்கள் வீட்டிற்குச் சென்று தண்ணீர் பிடித்துக்கொள்வது, சமைத்துக்கொள்வது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் வீட்டுப்பக்கம் வரவேற்பரையும், பிக் பாஸ் விசாரணை அறையும் (கன்ஃபஷன் ரூம்) மட்டுமே உள்ளது. இதனால் பெண்கள் பக்கம் மிகக் குறைவாகவே ஆண்கள் வருகின்றனர்.

ஒவ்வொருமுறையும் இரு வீட்டுக்கும் இடையில் இருக்கும் கோட்டைத் தாண்டி செல்ல, அந்த வீட்டினர் கொடுக்கும் டாஸ்கை செய்து முடித்துவிட்டுச் செல்ல வேண்டும். பெண்கள் அடிக்கடி ஆண்கள் வீட்டுப் பக்கம் செல்ல வேண்டியுள்ளதால், பெண்கள் அடிக்கடி ஆண்கள் கொடுக்கும் டாஸ்க் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதனால் ஆண்களுக்கு டாஸ்க் கொடுக்கும் முயற்சிகளில் பெண்கள் ஈடுபடுகின்றனர். இதற்காக ஒரு திட்டத்தையும் தீட்டுகின்றனர். பெண்கள் வீட்டுப் பக்கம் வரவேற்பரைக்கு வரும் ஆண்கள் டாஸ்க் செய்ய வேண்டும் - 30 விநாடிகளுக்கு நடனமாடிவிட்டுச் செல்ல வேண்டும் என்பதே அண்டஹ் டாஸ்க். ஆனால் ஆண்கள் அணியினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வரவேற்பரைக்கு பிக் பாஸ் அழைக்கும்போது மட்டுமே வருவதாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக வரவில்லை என்பதாலும் ஆண்கள் டாஸ்க் செய்ய மறுப்பு தெரிவிக்கின்றனர்.

இது இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த வாதத்தில் ஆண்கள் அணிக்கு சாதகமாக சாச்சனா பேசுவதாக செளந்தர்யா குற்றச்சாட்டை எழுப்புகிறார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து சாச்சனா தனது வாதங்களை முன்வைக்கிறார். இதனை ஏற்க மறுத்த செளந்தர்யா, சாச்சனா இரட்டை வேடம் போடுவதாக விமர்சிக்கிறார். இதனால் மனமுடைந்த சாச்சனா, கண்ணீருடன் குரலை உயர்த்திப் பேசுகிறார்.

எனினும் அணியில் உள்ள மற்ற பெண்களும் செளந்தர்யாவுக்கு சாதகமாகவே பேசுவதால் சாச்சனா தனியாகச் சென்று அழுகிறார். இந்த விடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பிக் பாஸ் 8 வீட்டில் உள்ள சாச்சனா, முதல் சீசன் போட்டியாளர் ஜூலியை நினைவூட்டுவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: முத்துக்குமரனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த செளந்தர்யா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com