கூலி படத்தில் நடிக்கவில்லை..! காரணம் கூறிய சிவகார்த்திகேயன்!

கூலி படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ்.
சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ்.
Published on
Updated on
1 min read

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் உடல்நிலை காரணமாக சில நாள்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் ரஜினி மீண்டும் பங்கேற்று நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அமரன் வெற்றிக் கொண்டாட்டத்தின் நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

நான் அடிக்கடி லோகேஷ் கனகராஜை சந்திப்பேன். நானும் அவரும் மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வினும் இன்னும் சிலரும் நண்பர்கள். அதனால் சந்திப்போம். எனது வீட்டுக்கு எதிரில்தான் கூலி படப்பிடிப்பு நடைபெறுகிறது. நான் அமரன் படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருப்பதால் அங்கு செல்லவில்லை.

கூலி படப்பிடிபுக்கு இனிமேல்தான் செல்ல வேண்டும். நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. கூலி எனது தலைவர் ரஜினி நடிக்கும் படம். அவ்வளவே. தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X