நடிகை கௌதமி, நடிகர் சூர்யா.
நடிகை கௌதமி, நடிகர் சூர்யா.

நடிகை கௌதமி மீது சூர்யாவுக்கு க்ரஷ்..!

நடிகர் சூர்யாவுக்கு இள வயதில் நடிகை கௌதமியை மிகவும் பிடிக்கும் என கார்த்தி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

கங்குவா படம் நவ. 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது.

கங்குவா திரைப்படம் நவ. 14 ஆம் தேதி வெளியாவதால் நடிகர் சூர்யா படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதைத் தொடர்ந்து தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்றார். அப்போது, பாலகிருஷ்ணா நடிகர் கார்த்திக்கு ஃபோன் செய்து உங்களது அண்ணாக்கு முதல் க்ரஷ் யார் என்று கேட்டார்.

அதற்கு நடிகர் கார்த்தி, “ஒரு நடிகை என்றால் எங்கண்ணாவுக்கு மிகவும் பிடிக்கும். சிக்குபுக்கு ரயிலே பாடலில் வரும் கௌதமியை அவருக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

அதனைக் கேட்டுக்கொண்டிருந்த சூர்யா, “டேய் நீ கார்த்தி இல்ல, கத்தி” என்பார். இது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com