

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் புதிய டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது.
சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.
படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
படத்துக்கு, தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் நவ. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் புதிய டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.