மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கங்குவா மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது: இயக்குநர் சிவா

இயக்குநர் சிவா கங்குவா திரைப்படம் குறித்து பேசியவை...

News image
Updated On :12 நவம்பர் 2024, 12:48 pm

கங்குவா திரைப்பட அனுபவங்களை இயக்குநர் சிவா பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.

படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2டி மற்றும் 3டியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வியாழக்கிழமை (நவ.14) வெளியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நவ. 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாள்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சிவா, "கங்குவா திரைப்படம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒரு இயக்குநராக அனைத்து வகையான திரைப்படங்களையும் எடுக்க முடியும் என நம்புகிறேன். இதுவரை நான் என்ன படங்களை எடுக்க வேண்டும் என நினைத்தேனோ அவற்றைத்தான் இயக்கியிருக்கிறேன். அவை, வெற்றியும் பெற்றுள்ளன.

என் முந்தைய படங்களைப்போல கங்குவா படமும் மனித உறவுகளின் உணர்ச்சிகளை மையமிட்டே உருவாகியிருக்கிறது. இதில், மன்னிப்பை பேசியிருக்கிறோம். மிகச்சிறந்த திருப்தியான படத்தை எடுத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.