தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கங்குவா சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

கங்குவா சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது பற்றி..

கங்குவா

Published On :12 நவம்பர் 2024, 12:02 pm IST

கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.

படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வியாழக்கிழமை வெளியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நவ. 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாள்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், திரைப்படம் வெளியாகும் முதல் நாளான நவ. 14 மட்டும் கூடுதலாக ஒரு காட்சியை சேர்த்து மொத்தம் 5 காட்சிகளை திரையிட்டு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணிக்குள் 5 காட்சிகளையும் திரையிட்டு முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகள், வட இந்தியாவில் 3,500 திரைகள் உள்பட ஒட்டுமொத்தமாக 6,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.