பிக் பாஸ் 8: பவித்ராவுடன் தரக்குறைவாக சண்டையிடும் சத்யா!

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போன்றும், ஆசிரியர்களைப் போன்றும் வேடமிட்டு நடிக்க வேண்டும்.
பவித்ராவுடன் சத்யா
பவித்ராவுடன் சத்யாபடம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பள்ளிக்கூட டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போன்றும், ஆசிரியர்களைப் போன்றும் வேடமிட்டு நடிக்க வேண்டும்.

பிக் பாஸ் வீட்டின் அன்றாட வேலைகளைத் தவிர்த்து பெரும்பாலான நேரங்களில் மாணவர்களாகவே போட்டியாளர்கள் நடித்துக்கொண்டிருக்க வேண்டும்.

கடந்த இரு நாள்களாக பள்ளிக்கூட மாணவர்களைப் போன்று வேடமிட்டு போட்டியாளர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் பவித்ராவுடன் சத்யா சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த ராணவை சக போட்டியாளர்கள் பலரும் நிராகரிப்பதைப் போன்று நடந்துகொள்கின்றனர். அதீத ஆர்வம் காரணமாக ராணவ் உடன் பேசுவது நமக்கே பாதமகமாக மாறிவிடும் என பிக் பாஸ் போட்டியாளர்களில் பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ராணவ்வுக்கு ஆதரவாக பவித்ரா குரல் கொடுக்கிறார். பள்ளிக்கூட டாஸ்க்கின்போது ராணவை அடிப்பதைப் போன்று சத்யா கோபப்படுகிறார். இதனால் அதிருப்தி அடைந்த பவித்ரா, ராணவிடம் நடந்துகொள்ளும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என சத்யாவைக் கண்டிக்கிறார்.

இதற்கு பதிலளித்த சத்யா, உனக்காகத்தான் ராணவிடம் அப்படி நடந்துகொண்டதாகக் கூறி, ஆத்திரத்தில் கத்துகிறார். உன்னைத் தொந்தரவு செய்வதால்தால் நான் அவனிடம் அப்படி நடந்துகொண்டேன் எனக் கூறுகிறார்.

எனக்காக யாரும் பேச வேண்டாம், எனக்கும் ராணவுக்கும் பிரச்னை என்றால் அதனை நானே சரிசெய்துகொள்வேன் என பவித்ரா கூறுகிறார்.

ஆத்திரத்தில் மரியாதையில்லாமல் சத்யா பேசுவதால், கோபமடைந்த பவித்ரா இனி மரியாதையில்லாமல் கூப்பிடுவதை நிறுத்துமாறு கண்டிக்கிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் விஜயகுமார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com