நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர்.
தற்போது, மம்மூட்டி அவரின் தயாரிப்பிலேயே ஒரு படத்தில் நடித்து வருகிறார். விநாயகன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மம்மூட்டி வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், நடிகர் மோகன்லால் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மோகன்லாலின் ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையும் படிக்க: 10,000 திரைகள்! சூர்யாவின் உச்ச வசூல் படமாகுமா கங்குவா?
இந்த நிலையில், ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தையும் இவர்கள் இருவருமே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு நவ.16 ஆம் தேதி இலங்கையில் துவங்கவுள்ளதாகவும் அப்படப்பிடிப்பில் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகவல்கள் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. மலையாள சினிமாவின் இருபெரும் ஆளுமைகளாகக் கருதப்படும் நடிகர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மம்மூட்டியும் மோகன்லாலும் இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு ’டிவெண்டி: 20’ என்கிற மலையாளப் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வருடன் 4 அமைச்சர்களும் இணைந்து நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் ஜன நாயகன்!

டாஃபே-டியூட்ஸ் இணைந்து ராஜஸ்தானில் புதிய என்ஜின் உற்பத்தி ஆலை தொடக்கம்

நடிகையாக அறிமுகமாகும் மகள்! சிறப்பு தோற்றத்தில் மோகன்லால்!

5 ரூபாய் மருத்துவராக நடிக்கும் சூர்யா?
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



