
கங்குவா திரைப்படத்தின் வசூல் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நாளை (நவ.14) பிரம்மாண்டமாக வெளியாகிறது. தென்னிந்தியளவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அதிக திரைகளில் வெளியிட உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென இந்தியளவில் 6000 திரைகள் உள்பட உலகளவில் 10,000 திரைகளில் கங்குவா வெளியாகிறது. இவ்வளவு திரைகளில் வெளியாகும் முதல் சூர்யா படம் இதுதான்.
இதையும் படிக்க: வணங்கான் வெளியீடு எப்போது?
அதைத்தாண்டி, தென்னிந்தியளவில் அதிக திரைகளில் வெளியான படங்களில் பட்டியலிலும் கங்குவா இணையவுள்ளது. திரைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் வைத்தால், கங்குவா முதல் நாள் வசூலாகவே ரூ. 100 கோடியை நெருங்கும் எனத் தெரிகிறது.
ஒருவேளை இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றால், கிடைத்திருக்கும் திரைகளைக் கொண்டு வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். நடிகர் சூர்யாவுக்கும் இந்தியளவில் அங்கீகாரம் கிடைக்கலாம்.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்கள் கங்குவா படம் செய்ய வேண்டிய வசூல் சாதனைகளைப் பட்டியலிட்டும் வருகின்றனர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.