தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

புஷ்பா 2 படத்தின் டப்பிங்கில் ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தின் பணிகளை முடிக்க உள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

புஷ்பா 2 படத்தின் டப்பிங்கை தொடங்கிய ராஷ்மிகா

Published On :13 நவம்பர் 2024, 5:28 pm IST

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். டிச. 5 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

புஷ்பா - 2 திரைப்படத்தை உலகளவில் 11,500-க்கும் அதிகமான திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டப்பிங் பணிகளை தொடங்கியதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதில் படப்பிடிப்பு முடிந்தது வருத்தமாக இருப்பதாகவும் முதல் பாதிக்கான டப்பிங் முடிவடைந்து 2ஆம் பாதிக்கான டப்பிங் முடிவடையும் தருணத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமந்தாவுக்குப் பதிலாக இந்த முறை ஸ்ரீ லீலா நடனமாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.