சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ரஷ்மிகா மந்தனா? அதிகரிக்கும் சுவாரசியம்!

நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக் படம் குறித்து...

M.S. Subbulakshmi, Rashmika Mandanna

எம்.எஸ். சுப்புலட்சுமி, ரஷ்மிகா மந்தனா - படங்கள்: ENS, இன்ஸ்டா / ரஷ்மிகா மந்தனா.

Published On :29 ஆகஸ்ட் 2026, 7:39 pm IST

மறைந்த லெஜண்டரி பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

இந்தப் பயோபிக்கில் தொடக்கத்தில் நயன்தாரா, த்ரிஷா என பலர் பரிந்துரைக்கப்பட்டனர். பின்னர், ருக்மணி வசந்த் அல்லது சாய்பல்லவி என்ற நிலைக்கு வந்தது. இந்த நிலையில், ரஷ்மிகாவியன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் இந்த பயோபிக்கை உருவாக்க இருக்கிறது. இதில் சாய் பல்லவி ராமாயணா படத்தின் இரண்டாம் பாகத்தின் கால்ஷீட் பிரச்னையால் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

மைசா என்ற படத்தின் சண்டைக் காட்சிகளின்போது ரஷ்மிகா மந்தனாவுக்கு தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ஓய்வில் இருக்கிறார்.

ஜெர்ஸி படத்தை இயக்கிய கௌதம் தின்னனூரி இயக்கத்தில் இந்த பயோபிக் உருவாகவிருக்கிறது. இதனை ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாஸ் இணைந்தும் தயாரிக்கவிருக்கிறார்கள்.

எம்.எஸ். சுப்புலட்சுமி 88 வயதில் காலமானார். இந்தியாவின் பாரத் ரத்னா விருது வென்ற முதல் பாடகி என்பதும் முதல்முறையாக ரமோன் மாக்சேசே விருது வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளில் செப்.16ஆம் தேதி இந்தப் பயோப்பிக்கின் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, உறுதிப்படுத்தாத பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகிக்கொண்டேதான் இருக்குமென்பதும் தவிர்க்க முடியாதது.

Summary

Is Rashmika Mandanna playing MS Subbulakshmi in biopic? Here's what we know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.