சமந்தாவைவிட 60% குறைவான ஊதியம் பெற்ற ஸ்ரீ லீலா..! புஷ்பா பட நடனத்துக்காக...

புஷ்பா 2 படத்தில் நடனமாடியதுக்காக நடிகை ஸ்ரீ லீலா பெற்ற ஊதியம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா, ஸ்ரீ லீலா.
சமந்தா, ஸ்ரீ லீலா.
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் பிறந்த தெலுங்கு பேசும் ஸ்ரீ லீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினை 2021இல் முடித்தார். அதற்கு முன்பாகவே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2019இல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். 2022இல் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.

ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்து மிகப்பெரும் ஆதரவினைப் பெற்றார். சிறிய வயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப் பழகியவர். இவரது பல்சர் பாடல் வைரலானது. 

மகேஷ்பாபு, பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.

குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுடன் குறிச்சி மடதாபெட்டி பாடலுக்கு ஆடிய நடனம் மிகவும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, புஷ்பா 2 படத்தில் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஸ்ரீ லீலா ரூ.2 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். சமந்தா இவரைவிட 60 சதவிகிதம் அதிகமாக ரூ.5 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை சமந்தா..
நடிகை சமந்தா..

சமந்தாவைவிட ஸ்ரீ லீலா நடனத்தில் கலக்கினாலும் சமந்தாவின் கவர்ச்சிக்குதான் ரசிகர்கள் அதிகம்.

புஷ்பா 2 படம் டிச. 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஸ்ரீ லீலா நடனதுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com