ஒரு வாரத்திற்கு விமர்சனங்களை தடுக்க வேண்டும்: வசந்த பாலன்

இயக்குநர் வசந்த பாலன் சினிமா விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்...
ஒரு வாரத்திற்கு விமர்சனங்களை தடுக்க வேண்டும்: வசந்த பாலன்
Published on
Updated on
1 min read

திரைப்படம் வெளியானதிலிருந்து ஒரு வாரத்திற்கு விமர்சனங்கள் வராமல் தடுக்க வேண்டும் என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததால் படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் திணறி வருகிறது. இந்தப் படத்திற்கான விமர்சனங்களையொட்டி சில விவாதங்களே எழுந்துள்ளன.

முக்கியமாக, பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் நேர்காணலில், “நான் கடந்த 44 ஆண்டுகளாக திரைப்பட விநியோகஸ்தர் தொழிலில் இருக்கிறேன். எனக்குப் பிடிக்காத படத்தின் 100-வது நாள் வெற்றியை நானே நடத்தியிருக்கிறேன். அன்னக்கிளி, 16 வயதினிலே போன்ற படங்கள் வெளியானபோது சரியான வரவேற்பை பெறவில்லை. படம் நன்றாக இருக்கிறது என சொல்லிச் சொல்லியே பெரிய வெற்றியைப் பெற்றன.

இன்று பக்கத்து மாநிலத்திற்குச் சென்று அதிகாலைக் காட்சியில் படம் பார்த்துவிட்டு விமர்சனம் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததை யூடியூபர்கள் பேசுகின்றனர். இதனால், சினிமா தொழிலே நாசமாகப் போகிறது. எந்தக் காட்சி நன்றாக இல்லை என்பதைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து மொத்த படத்தையும் எதிர்மறையாக அணுகுகின்றனர்.

இந்தியன் - 2, வேட்டையன், கங்குவா படங்களின் வசூல் குறைந்ததற்கு இந்த விமர்சனங்களே காரணம். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் வரை விமர்சனங்கள் வரக்கூடாது என்கிற தடை உத்தரவை வாங்க தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் வசந்த பாலன், ” நான் திருப்பூர் சுப்ரமணியம் கருத்தை ஆதரிக்கிறேன். தயாரிப்பாளர்கள் சங்கம் விமர்சனங்கள் விஷயத்தில் விரைவில் முடிவெடுக்கவேண்டும். ஆசிட் ஊற்றுவது போல வருகிற விமர்சனங்கள் ஒரு வாரம் வரை இணையதளங்களில் வரவிடாமல் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com