

நடிகை நஸ்ரியா புஷ்பா - 2 திரைப்படம் குறித்து பேசியது வைரலாகியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்களாக நடைபெற்று வந்தது. ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினாலும் சில பிரச்னைகளால் தாமதமானது.
இப்படத்தை டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட உள்ளனர். படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியானது.
பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமென்பதால் டிரைலர் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் வைராகியுள்ளது.
இதையும் படிக்க: மம்மூட்டி - மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
ஆச்சரியமாக தெலுங்குக்கு இணையான பார்வைகள் ஹிந்தி டிரைலருக்கும் கிடைத்துள்ளதால் இப்படம் பாலிவுட்டில் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்றே தெரிகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகையும் ஃபஹத் ஃபாசில் மனைவியுமான நஸ்ரியா, “ புஷ்பா முதல் பாகத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர அறிமுகமே இடம்பெற்றிருந்தது. இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க ஃபஹத்தின் ஷோவாக (show) இருக்கும். முதல்பாகத்தை விட அதிக நேரம் புஷ்பா - 2 படத்தில் தோன்றவுள்ளார். உண்மையான ஃபஹத்தை பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஃபஹத்துடன் நஸ்ரியா.
ஏற்கனவே, படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவான நிலையில் நஸ்ரியாவின் இக்கருத்து ரசிகர்களிடம் ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
பிலிம் கேமராவில் எடுக்கப்படும் ரஜினி - கமல் திரைப்படம்?
லோகா - 2 படப்பிடிப்பு எப்போது? கல்யாணி பதில்!
அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

