ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் வெற்றி பெற்றது. அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார்.
இதற்கிடையே, அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கிற படத்தில் நடித்திருந்தார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சில நாள்களுக்கு முன், சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியானது. இதில், இடம்பெற்ற சென்னை மத்திய சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களுக்கு இடையான காட்சிகள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக, படத்தின் எடிட்டர் செல்வா ஆர்கே-ன் டீசர் காட்சி இணைப்புகளும் வடிவமைப்பும் படத்தின் மீதான ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளன. இதுவரை, யூடியூப்பில் இந்த டீசர் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்த நிலையில், படம் நவ.29ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
#SorgaVaasal in theatres from November 29thð¥ pic.twitter.com/Mgl6rIk2IY
— RJ Balaji (@RJ_Balaji) November 19, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் தேதி!

வருண் தேஜ் நடித்துள்ள கொரியன் கனகராஜு..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அஜித் குமாரை இயக்குவீர்களா? இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதில்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



