இயக்குநர் ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் இரு ஆண்டுகளாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது.
அந்த விழாவில், தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களைக் கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வானது.
சர்வதேச திரைவிழாக்களில் கொண்டாடப்பட்டாலும் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் விதமாக டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், அக்டோபர் 1 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Release teaser of the movie 'Ezhu Kadal Ezhu Malai' released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









