பிரபல மலையாள நடிகர் காலமானார்!

பிரபல மலையாள நடிகர் மேகநாதன் (60) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நடிகர் மேகநாதன்
நடிகர் மேகநாதன் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மலையாள நடிகர் மேகநாதன் (60) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

நுரையீரல் தொடர்பான நோயினால் அவதிப்பட்டு வந்த மேகநாதன் கோழிக்கூட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது வீட்டில் இறுதி சடங்கு நடைபெறுமென அவரது குடும்பத்தினர் கூறியுள்ளார்கள்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்த மேகநாதன் 1983இல் அஸ்த்ரம் படத்தில் அறிமுகமானார். லெஜண்டரி நடிகர் பாலன் கே.நாயர்- சாரதா நாயர் தம்பதிக்கு 3ஆவது மகனாக பிறந்தவர். மனைவி சுஸ்மிதா மகள் பார்வதியுடன் வாழ்ந்து வந்தார்.

1983இல் இருந்து அடுத்த முப்பதாண்டுகளில் 50 படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார். குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட மேகநாதன் வில்லனாக பல படங்களில் கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக பஞ்சக்னி, சமயம், ராஜதானி, பூமிகீதம், செங்கோல், மலப்புரம் ஹகி மஹானயா ஜோஜி, பரியிக்கர பாப்பன், வாஸ்தவம் போன்ற படங்களில் கவனம் பெற்றார்.

சினிமா தவிர்த்து தொலக்காட்சிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் சமதான புஸ்தகம் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி உள்பட பல பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

”சினிமாவில் வில்லனுக்கென்று இருந்த முகத்தை மாற்றியமைத்தவர்” என வி.சிவன்குட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com