தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!

தமிழ்நாட்டில் மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் 5 தொடர்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தமிழ்நாட்டில் மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் 5 தொடர்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் மத்தியில் எந்த தொடர் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது என்பதை வாரவாரம் வெளியாகும் டிஆர்பி பட்டியல் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த வாரத்தில் முதல் 5 இடங்களில் உள்ள தொடர்களின் பட்டியல் குறித்து காணலாம்.

டாப் 5 தொடர்கள்

இப்பட்டியலில் 5வது இடத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடர் உள்ளது. சுந்தரி தொடரில் கேப்ரியல்லா - ஜிஸ்ணு மேனன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. சுந்தரி தொடர் 8.81 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

4வது இடத்தில் மருமகள் மற்றும் ராமாயணம் ஆகிய தொடர்கள் உள்ளன. இந்த இரு தொடர்களும் 8.89 புள்ளிகளைப் பெற்றுள்ளன. மருமகள் தொடரில் கேப்ரியல்லா சார்ல்டன் - ராகுல் ரவி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராமாயணம் தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பானது. இந்தத் தொடர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. டெபினா பானர்ஜி சீதையாக நடிக்கிறார். குர்மீட் செளத்ரி ராமனாக நடிக்கிறார்.

3வது இடத்தில் மூன்று முடிச்சு தொடர் உள்ளது. . இத்தொடரில் ஸ்வாதி கொண்டே, நியாஸ் கான் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 9.95 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

2வது இடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. மணீஷா மகேஷ் - அமல்ஜித் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 10.03 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதல் இடத்தில் கயல் தொடர் உள்ளது. கயல் தொடரில் சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 10.34 புள்ள்கள் பெற்று டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதையும் படிக்க | காதலியை கரம் பிடித்தார் சிறகடிக்க ஆசை நடிகர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்