ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

ஓடிடிக்கு வராத நடிகர்! என்ன காரணம்?

நடிகர் ஓடிடி வெளியீட்டில் தாமதம்...

Published On :

நடிகர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தாமதமாகி வருகிறது.

தென்னிந்தியளவில் கவனம்பெற்ற நடிகராக இருப்பவர் டோவினோ தாமஸ். மாயநதி, மின்னல் முரளி, 2018, தள்ளுமலா உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ஏஆர்எம் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆனால், இதற்கு முன் நடிகர் லாலின் மகனும் இயக்குநருமான லால் ஜூனியர் (ஜீன் லால்) இயக்கத்தில் நடிகர் என்கிற படத்தில் நடித்திருந்தார். மைத்ரி மூவிஸ் நிறுவனத் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவான அப்படம் திரையரங்குகளில் வெளியாகி தோல்விப்படமானது.

முதலில் இப்படத்திற்கு, ’நடிகர் திலகம்’ எனப் பெயரிட்டிருந்தனர். சில காரணங்களால் திலகத்தை நீக்கிவிட்டனர். சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து சூப்பர் ஸ்டாராகும் நடிகரின் வாழ்க்கை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருந்தது.

டோவினோ, பாவனா, சௌபின் சாகிர், பாலு வர்கீஸ் நடிப்பில் இந்தாண்டு மே. 3 ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை எந்த ஓடிடியிலும் வெளியாகவில்லை. ஓடிடி உரிமத்தைக் கைப்பற்றிய நிறுவனம் படத்திற்கான உரிமத்தொகையைக் குறைக்கச் சொல்கிறார்களாம்.

Story image

காரணமாக, திரையரங்கில் வசூலை ஈட்டாததைக் குறிப்பிடுகின்றனராம். இதனால், நீண்ட நாள்களாக இதன் ஓடிடி வெளியீடு சர்ச்சையிலேயே நீடிக்கிறது.

டோவினோவின் ஏஆர்எம் வெற்றி பெற்றதால் நடிகர் படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.