தொகுதி மறுவரையறை மசோதா: மு. க. ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, கார்கே?தொகுதி மறுவரையறை: மு.க. ஸ்டாலினை சந்திக்கும் மமதா பானர்ஜி!திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரை

சூர்யாவின் சீன்! ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

scene

சீன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்

Updated On :

நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன். தீபாவளியை முன்னிட்டு நவ. 6 அன்று திரையரங்குகளில் சீன் திரைப்படம் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று, வசூல் ரீதியாக வெற்றிப் படமானது.

இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் நடிகர் நஸ்லென் மற்றும் நஸ்ரியா ஆகியோரின் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்ததால் அவர்களுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைப் பின்னணியால் இந்தப் படம் உலக அளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சீன் திரைப்படம் டிச. 4 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for actor Suriya's film 'Seen' has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.