
விஜய் 69 படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹெச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, ‘விஜய் 69’ படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஹெச்.வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏற்கனவே, விஜய்க்கு வில்லனாக கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர், சிவகாசி, வில்லு, போக்கிரி, வாரிசு ஆகிய படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு முன்னதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.