
விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
இதில் நடிகராக பாபி தியோல் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்ததாக படக்குழு அறிவித்தார்கள்.
இந்நிலையில் இன்று படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதே வேளையில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான பூமிப் பூஜை இன்று நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
கட்சித் தொண்டர்களுக்கு, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து எழுதப்பட்ட கடிதத்தில், கட்டுப்பாடுடனும், பக்குவத்துடனும் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
படக்குழு விரைவில் பூஜை புகைப்படங்களை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தி கோட் என்ற ஹேஷ்டேக்குடன் புகைப்படம் பகிர்ந்துள்ளார். கோட் படம் ஓடிடியில் வெளியானதைக் குறிக்கும் வகையில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.