கடைசிப் படம்: பூஜையில் விஜய் பங்கேற்பு!
நடிகர் விஜய் தனது கடைசிப் படத்தின் பூஜையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றார்.
ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் விஜய் 69 திரைப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக இதுவரை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் படம் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு ஏற்கனவே அறிவிந்திருந்த நிலையில், சென்னையில் படத்துக்கான பூஜை இன்று காலை நடைபெற்றது.
இதையும் படிக்க : ஓடிடியில் கோட்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!
இந்த நிகழ்வில் நடிகர் விஜய்யுடன், இயக்குநர் வினோத், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், இதுவே தனது கடைசிப் படம் என்று அறிவித்துள்ள நிலையில், இந்தப் படம் திரைத் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவு - சத்யன் சூர்யன் (கைதி, மாஸ்டர்)
சண்டைப் பயிற்சி - அனல் அரசு
கலை இயக்குநர் - செல்வகுமார்
படத்தொகுப்பு - பிரதீப் ஈ.ராகவ்
ஆடை வடிவமைப்பாளர் - பல்லவி