ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இயக்குநராக வனிதா..! டிரெண்டிங்கில் படத்தின் புரோமோ!

வனிதா விஜய்குமார் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

வனிதா -ராபர்ட் மாஸ்டர்.

Published On :

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் நடிகையாக இருக்கிறார். வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார்.

இதற்கிடையே, அவருக்கும் பீட்டர்பால் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது. ஆனால், சில நாள்களிலேயே இருவரும் பிரிந்ததுடன் பீட்டரும் திடீர் மரணமடைந்தார். தன் குழந்தைகளுடன் தனியாகவே இருப்பதாக வனிதா தெரிவித்தார்.

வனிதா இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றினார். அதில் அவரும் ராபர்ட் மாஸ்டரும் இருக்கும் புகைப்படத்தில் அக்.5 தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்ததால் பலரும் திருமண அறிவிப்போ என சந்தேகித்தார்கள்.

அது அடுத்த படத்தின் போஸ்டர் என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. மிஸ்டர் & மிஸ்ஸஸ் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் அறிவிப்பு நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.

இந்த விடியோ யூடியூப்பில் டிரெண்டிங்கில் 4ஆவது இடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை ஜோவிகா விஜய்குமார் தயாரிக்க வனிதா விஜய்குமார் இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.