பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கங்குவா இசை வெளியீட்டு விழா தேதி - தகவல்!

கங்குவா திரைப்படத்தின் இசைவெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2024, 11:10 am

DIN


கங்குவா திரைப்படத்தின் இசைவெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனால், வணிக பாதிப்பு ஏற்படும் என்பதால் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக். 20 ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான கங்குவா டிரைலரில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான பின்னணி இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.