மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கதாநாயகனாகும் மிஷ்கின்?

மிஷ்கின் நாயகனாக நடிப்பதாகத் தகவல்.

News image

மிஷ்கின்

Updated On :10 அக்டோபர் 2024, 6:40 am

இயக்குநர் மிஷ்கின் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி  நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின்.  சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர். நந்தலாலா படத்தை இயக்கியதுடன் அவரே நாயகனாகவும் நடித்தார்.

இறுதியாக, உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ படத்தை இயக்கினார். அது, வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, பிசாசு - 2 படத்தை எடுத்தார். ஆனால், அப்படம் 2 ஆண்டுகளாகியும் திரைக்கு வரவில்லை.

தற்போது, விஜய் சேதுபதியை வைத்து டிரைன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே சவரக்கத்தி, மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில், மிஷ்கின் கதாநாயகனாக மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை, ரைட்டர் படத்தின் இயக்குநரான பிராங்க்ளின் ஜேக்கபின் உதவி இயக்குநரான கோகுல் இயக்குகிறார். விரைவில், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.