இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பிளாக் திரைகள் அதிகரிப்பு!

பிளாக் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது...

News image
Updated On :14 அக்டோபர் 2024, 11:12 am

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியா பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தார் ஜீவா. அவரது கதை தேர்வுகளும், திரைப்படங்களும் சரியாக இருப்பதில்லை என ரசிகர்களிடம் விமர்சனங்கள் எழுந்தன.

இதனை கருத்தில்கொண்டோ என்னவோ, நீண்ட காலத்திற்குப் பின் ஜீவா பிளாக் படத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஹாரராக உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெற்று வருகிறது. அக். 11 ஆம் தேதி வெளியானபோது சில திரைகளே ஒதுக்கப்பட்டிருந்தன.

தற்போது, படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் ரூ. 2 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.