
ரஜினியைப் போல்... பாராட்டுகளைப் பெறும் நடிகர் ரிஷிகாந்த்!
மொத ராத்திரி திரைப்படம் மூலம் நடிகர் ரிஷிகாந்த் கவனிக்கப்பட்டுள்ளார்....

ரிஷிகாந்த்
நடிகர் ரிஷிகாந்த் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ’மொத ராத்திரி’.
திருமணத்தில் விருப்பமில்லாத நாயகனுக்கும் நாயகிக்கும் குடும்பத்தினர் திடீரெனத் திருமணம் செய்துவைக்க அதன்பின் நடக்கும் குழப்பங்களும் சுவாரஸ்யங்களுமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. நாயகியாக நடிகை அனிஷ்மா அனில்குமாரும் நல்ல பங்களிப்பை வழங்கியிருந்தார்.
தற்போது, இப்படம் ஓடிடியில் வெளியாகி சிறப்பான கவனத்தைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் பார்க்கத் தவறிவிட்டதாகப் பலரும் கருத்து கூறிவரும் வேளையில், நடிகர் ரிஷிகாந்த்தின் நடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சாயல் பெரிதாக இல்லாமலே அவரை நினைவுபடுத்துவதாக பாராட்டியும் வருகின்றனர்.
சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்று மொத ராத்திரியில் நாயகனாக வென்ற ரிஷிகாந்த், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் டோரதி திரைப்படத்திலும் நாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor Rishikanth's performance has been well-received by fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








