
மொத ராத்திரி ஓடிடி தேதி இதுவா?
மொத ராத்திரி திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து...

நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் வெளியான மொத ராத்திரி திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ’மொத ராத்திரி’.
புதிதாகத் திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் குடும்ப - நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. திருமணத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுடன் உருவான இப்படம் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றதுடன் இயக்குநரின் முதல் திரைப்படம் போன்றே தெரியவில்லை என்கிற விமர்சனத்தையும் பெற்றது.
வணிக ரீதியாகவும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது. இந்த நிலையில், மொத ராத்திரி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற செப். 18 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Details regarding the OTT release date of the movie Modha Rathiri, starring actor Rishikanth, have been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







