திமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

சசிகுமாரின் ஃபிரீடம் பட கிளிம்ஸ் விடியோ எப்போது?

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் கிளிம்ஸ் விடியோ குறித்து படக்குழு கூறிய தகவல்.

ஃபிரீடம் பட போஸ்டர்.

Published On :

இயக்குநரான சசிகுமார் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கருடன் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக உருவான இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அடுத்ததாக, இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜயா கணபதி ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் ஃபிரீடம் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் லிஜோமோல் நாயகியாக நடித்துள்ளார். இதன் கிளிம்ஸ் விடியோ வரும் அக். 20ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.