தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஹன்சிகா, அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில், மை 3 வெப் என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். கார்டியன் படத்திலும் பேயாக நடித்திருந்தார். இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது காந்தாரி எனும் படத்தில் நடித்துள்ளார். ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார்.
கடந்த 2022 டிசம்பரில் ராஜஸ்தான் கோட்டையில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது, மும்பையில் புதிய வீடு ஒன்றினை வாங்கியுள்ளார். அதன் கிரகபிரவேஷம் சமீபத்தில் நடைபெற்றது.
நடிகை ஹன்சிகா அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “புதிய தொடக்கம்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









