பரபரப்பில் பிக் பாஸ் வீடு! கடும் வாக்குவாதத்தில் ஆண் - பெண் அணியினர்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் அணியினருக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாது என்று பெண்கள் அணியினர் கூறியுள்ளனர்.
சாச்சனாவுக்கு உதவி செய்வதற்காக விதிகளை மீறி பெண்கள் வீட்டுக்குள் அருண் நுழைந்ததால், ஆண்கள் அணியுடன் போடாப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பெண்கள் வாதிட்டதால் பிக் பாஸ் வீடு கலவர பூமியாக மாறியுள்ளது.
என்ன ஒப்பந்தம்?
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள், தனி படுக்கை கொண்ட அறையை பெண்களுக்கு விட்டுத் தர வேண்டும் என்றால், ஆண்களை யாரையும் ஒரு வாரம் பெண்கள் நாமினேஷன் செய்யக் கூடாது என்று இரு அணியினரும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.
தொடக்கத்தில், இந்த ஒப்பந்தத்துக்கு ஜாக்லினும், தர்ஷிகாவும் ஒத்து வரவில்லை என்றாலும், பின்னர் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15வது நாளான நேற்று, இந்த வாரத்துக்கான நாமினேஷன் நடைபெற்றது. அப்போது, ஆண்களுடன் பெண்கள் போட்ட ஒப்பந்தத்தை இந்த வாரம் நிறைவேற்ற வேண்டுகோள் வைத்தனர்.
இதுகுறித்து இந்த வாரத்தின் கேப்டனான தர்ஷிகா பிக் பாஸிடம் கேட்டதற்கு, விதிகள் புத்தகத்தில் இல்லாதவற்றை என்னால் கூற முடியாது எனத் தெரிவித்துவிட்டதால், நேற்றே சிறிது வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதையும் படிக்க : பிக் பாஸில் புது வரலாறு: மீண்டும் கேப்டனானார் தர்ஷிகா!
ஆண்கள் - பெண்களிடையே மோதல்
இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில், ஆண்கள் அணிக்கு இந்த வாரம் சென்றுள்ள சாச்சனாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை பிக் பாஸுடன் பேசுவதற்கான அறைக்கு அருண் கூட்டிச் சென்றார்.
ஆனால், விதிகளை மீறி பெண்களின் அனுமதி பெறாமல் அவர்களின் எல்லைக்குள் அருண் நுழைந்துவிட்டதால், ஆண்கள் அணியுடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்தானதாக பெண்கள் அணியினர் தெரிவித்ததால் ஆண்கள் கோபமடைந்தனர்.
சாச்சனாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட ஒரே காரணத்துக்காக தான், அருண் விதிகளை மீறி பெண்கள் பகுதிக்கு சென்றதாகவும், எங்களின் தேவைக்கு நாங்கள் போகவில்லை என்றும் ஆண்கள் தங்களின் தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர்.
ஆனால், பெண்கள் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கக் கோரி கேப்டனிடன் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து, உங்களால் வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை என்றால் நேரடியாக சொல்லி விடுங்கள் எனத் தெரிவிக்கின்றனர்.
இதனால், பிக் பாஸ் வீடே கலவர பூமி போல் காட்சி அளிக்கின்றது.
இதனிடையே, கடந்த வாரம் மனசாட்சி, மனிதாபிமானம் எனப் பேசிய பெண்கள் அணியே தற்போது இப்படி பேசுவது சற்று வருத்தமாக இருப்பதாக சாச்சனா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.