ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கைதி - 2 படப்பிடிப்பு அப்டேட் கொடுத்த கார்த்தி!

கைதி - 2 அப்டேட்...

News image
Updated On :27 அக்டோபர் 2024, 1:12 pm

DIN

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து கார்த்தி பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கைதி திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில், “எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது. கார்த்தி மற்றும் எஸ். ஆர். பிரபுவுக்கு நன்றி. இவர்களால்தான் ‘லோகேஷ் யுனிவர்ஸ்’ சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கங்குவா இசை வெளியீட்டில் பேசிய நடிகர் கார்த்தி, ‘கைதி - 2 படம் அடுத்தாண்டு துவங்கும். ரோலக்ஸை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்’ எனக் கூறினார். இதனால், கைதி - 2 படப்பிடிப்பு கூலி படத்திற்குப் பின் துவங்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.