

நடிகர் கார்த்தி கைதி - 2 திரைப்படம் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
நடிகர் கார்த்தியை வைத்து கைதி - 2 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதற்கான அறிவிப்பு வந்ததும், மீண்டும் டில்லியைக் (கார்த்தி) காண ரசிகர்களிடம் ஆவல் எழுந்தது.
டில்லி யார்? சிறைக்குச் செல்வதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்? என்கிற கேள்விகளுக்கு கேங்ஸ்டர் பாணி கதையாக லோகேஷ் உருவாக்குவார் என ஏகப்பட்ட அனுமானங்கள் எழுந்தன. இப்படத்தின் படப்பிடிப்பும் இந்த டிசம்பரில் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், சில காரணங்களால் லோகேஷ் இப்படத்திலிருந்து விலகினார். தற்போது, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் கார்த்தியிடம், ‘லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் கூட்டணி இணைந்துவிட்டது. கைதி - 2 என்ன ஆனது?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கார்த்தி, ”கைதி - 2 குறித்து லோகேஷ் கனகராஜ்தான் சொல்ல வேண்டும்” எனக் கூறினார். இதனால், இப்படத்திலிருந்து முதலில் லோகேஷ் கனகராஜ் விலகியிருக்கலாம் என்றே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.